தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

        திருவண்ணாமலையில் வரும் 27-ம் தேதி  கார்த்திகை தீபத் திருவிழா நடக்க உள்ளதால் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வரும் 27-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து காலை பத்து பத்துக்கு புறப்பட்டு மாலை மூன்று 30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமார்க்கமாக திருவண்ணாமலையிருந்து இரவு எட்டு 30க்கு புறப்பட்டு, சென்னைக்கு நள்ளிரவு இரண்டு 15க்கு வந்தடையும். மேலும் புதுச்சேரி, விழுப்புரத்திலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் ஹவுரா விரைவு ரயில் சிறப்பு நிறுத்தமாக அன்று மட்டும் திருவண்ணாமலையில் நின்று செல்லும்.
இதுதவிர, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.