புதியவட்டமாக கலசபாக்கம்

       திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டத்திலுள்ள 9 குறுவட்டங்களில் 3 முன்று குறுவட்டங்களான கலசபாக்கம், கடலாடி, கேட்டவரம்பாளையம் ஆகிய உள்வட்டங்களை உள்ளடக்கி புதியதாக கலசப்பாக்கம் என்ற வட்டத்தினை உருவாக்க மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
      இந்த புதிய வட்டத்தில் பணியாற்றுவதற்க்காக வெவ்வேறு நிலைகளில் மறுபணி பரவலமர்த்தல் மூலம் 23 பணியிடங்களும் மற்றும் புதியதாக 19 பணியிடங்களும் உருவாக்கப்படும். இதற்க்காக தொடரும் செலவினமாக 1 கோடியே, 35 லட்சத்து, 46 ஆயிரத்து 176 ரூபாயும், வட்டாச்சியர் அலுவலகம், குடியிருப்பு, வட்டாச்சியர் அலுவலகத்திற்கு தேவையான தளவாடங்கள், ஜீப், கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் இயந்திரம், பேக்ஸ், குளிர்சாதனம், தீயனணப்பான் ஆகியவற்றிகாக தொடர செலவினமாக 2 கோடியே, 41 லட்சத்து, 53 ஆயிரத்து 300 ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
       வருவாய் துறையில் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் பெரிது பயனடைவார்கள்.  
-இணைய செய்தியாளர் - சந்திரசேகர்